விழுப்புரம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொடு திரை மூலம் கற்பித்தல் பயிற்சி

தினமணி

செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடுதிரை மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
 இப்பயிற்சியை ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திலிப், விஜயகுமார், ரமேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
 இதில் விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் 32 பேரும், மாணவர்கள் 20 பேரும் கலந்து கொண்டனர்.
 தொடுதிரையை மாணவர்கள் பயன்படுத்தவும், தொடுதிரை பாடப் பகுதிகளை தயாரித்து கற்பிக்கும் முறையையும், மாணவர்களுக்கு தொடு திரை விளையாட்டுகள் மூலம் கற்பித்தல் பயிற்சியும் வழங்கப்பட்டது.
 இதில் பங்கேற்ற ஆசிரியர்கள், தங்களது வகுப்புகளையும் தொடுதிரை வகுப்பறைகளாக மாற்றி மாணவர்களுக்கு உலகத்தர கல்வியை வழங்குவோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT