விழுப்புரம்

மத்திய அரசின் கணினிப் பயிற்சி முகாம்

தினமணி

திருக்கோவிலூரில் பொது சேவை மைய இயக்குநர்களுக்கான கணினிப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பிரதம மந்திரி டிஜிட்டல் ஷக்ரா அபியான் திட்டத்தின் கீழ், 14 வயது முதல் 60 வயது வரையிலான பொதுமக்களுக்கு, பொது சேவை மையங்கள் வாயிலாக, அடிப்படை கணினிப் பயிற்சி அளிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து திருக்கோவிலூர் பகுதியில் தகுதி வாய்ந்த பொது சேவை மைய இயக்குநர்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ் வழங்கி, மாவட்ட திட்ட மேலாளர் தினேஷ்பாபு திட்டம் குறித்து பயிற்சி அளித்தார். பொது சேவை மைய உரிமையாளர்கள் ப.பத்மநாபன், ராஜா, காமராஜ், திருஞானசம்பந்தன், காந்திபெருமாள், சித்ரா, பாக்கியலட்சுமி, சத்யா, சூர்யா ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட பொது சேவை மைய இயக்குநர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT