முகப்பு
விழுப்புரம்

மனைப் பட்டா கோரி திருநங்கைகள் மனு

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:17 AM
பகிர்:

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 கள்ளக்குறிச்சி பகுதியில் 80 திருநங்கைகள் வரை வசிக்கின்றனர். இவர்களில் பலர் இந்திலி கிராமத்தில் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
 இந்த நிலையில், இவர்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். சுசிலா அம்மாள் தலைமையில் வந்த, திருநங்கைகள் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு வாடகை கொடுக்கும் அளவுக்கு வசதியின்மையால், இலவச வீட்டு மனை வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதற்கிடையே, இந்திலி பகுதியில் உள்ள ஒரு இடத்தை வட்டாட்சியர், நில
 அளவையர்கள் அண்மையில் அளந்து தேர்வு செய்தனர். அந்த இடத்தை, ஆட்சியர் ஆய்வு செய்து, திருநங்கைகளுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.