விழுப்புரம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்படுகின்றன.

தினமணி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்படுகின்றன.
 விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில், 42 ஆயிரத்து 66 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
 இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்படுகிறது. மாணவர்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு எழுதிய பள்ளியில் நேரில் சென்று தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
 நிரந்தர மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படாத நிலையில், இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைக் கொண்டு கல்லூரிகளில் சேர்வதற்கு நடைபெறும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவிகளுக்கு புதன்கிழமை தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் சுசீலா வழங்கினார். முதல் நாளிலேயே 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆவர்வமுடன் பெற்றுச் சென்றனர்.
 இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து, தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் வழங்கப்படும் இந்த சான்றிதழ் 90 நாள்கள் வரை பயன்பாட்டில் ஏற்புடையதாக இருக்கும் என்று தலைமை ஆசிரியர் சுசீலா தெரிவித்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT