அகத்தீஸ்வரன் கோயில் ராஜகோபுர திருப்பணி சிறப்புப் பூஜை
மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டையில் உள்ள சுமார் 600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அகத்தீஸ்வரன் கோயிலில் ராஜகோபுரம் திருப்பணி
மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டையில் உள்ள சுமார் 600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அகத்தீஸ்வரன் கோயிலில் ராஜகோபுரம் திருப்பணிகள் மேற்கொள்வதற்கான சிறப்புப் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பணி தொடங்குவதை முன்னிட்டு, அகத்தீஸ்வரன் கோயிலில் திருவாசகம் பாராயணம், திருப்பணிக்கான சிறப்பு வழிபாடு, யாக பூஜையுடன் தொடங்கியது. ராஜகோபுர திருப்பணிகள் நல்ல முறையில் நிறைவு பெறுவதற்காக கோயில் எதிரில் பாலாலய பூஜை நடத்தி பணிகள் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திருவாசம் பாராயணம் பாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அகத்தீல்வரர் ஆலய திருப்பணிக் குழுவினர், பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.