போலி மருத்துவர் கைது
கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்போலி மருத்துவர் கைது
கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அருகே பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் மகன் வீரமணி (28). இவர், க.அலம்பலம் கிராமத்தில் மருத்துவப் படிப்பு படிக்காமலே மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் பாலசந்தர், தேசிய ஊரக சுகாதார வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான மருத்துவ அதிகாரிகள், க.அலம்பலம் கிராமத்துக்குச் சென்று, அங்கு வீரமணியிடம் விசாரித்தனர். அப்போது, வீரமணி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, மருத்துவம் பார்த்து வந்ததும், கடந்த 8 ஆண்டுகளாக கச்சிராப்பாளையத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து கச்சிராப்பாளையம் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.