விழுப்புரம்

சங்கராபுரத்தில் தேசிய நூலக வார விழா

DIN

சங்கராபுரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 50-ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
வணிகர் பேரவை மாவட்டப் பொருளர் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் எல்.ஆரோக்கியசாமி, வள்ளலார் மன்றச் செயலர் இரா.நாராயணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோ.குசேலன் வரவேற்றார்.
நல்நூலகர் விருதுபெற்ற சங்கராபுரம் கிளை நூலக நூலகர் இரா.செழியனைப் பாராட்டி நல்லாசிரியர் மு.முகமதுஉசேன், மூவேந்தர் முத்தமிழ்க் கழகத் தலைவர் டி.எம்.சுப்பிரமணியன், கவிமாமணி சிங்கார.உதியன், சங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ம.சுப்பராயன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பேசினர். 
சைவ சித்தாந்தப் பேராசிரியர் ஜ.ஜம்புலிங்கம், நூலகப் பயன்பாட்டுக்காக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள தளவாடப் பொருள்களை நன்கொடையாக வழங்கினார். ஏழை மாணவ, மாணவிகள் 100 பேரை நூலகத்தில் உறுப்பினராக அரிமா மாவட்டத் தலைவர் 
வ.விஜயகுமார், நகை வணிகர் பிஸ்மி ஆகியோர் சேர்த்தனர். 
விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன், புரவலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் வழங்கியவர்களைப் பாராட்டியும், தேசிய நூலக வார விழா குறித்தும் பேசினார்.
இவ்விழா சங்கராபுரம், தேவபாண்டலம், ரங்கப்பனூர், அரசம்பட்டு, புதுப்பாலப்பட்டு, பாச்சேரி, மூங்கில்துறைப்பட்டு, செல்லம்பட்டு, ஆலத்தூர், கரடிசித்தூர், பூட்டை, அரியலூர், பகண்டை கூட்டுச்சாலை ஆகிய நூலகங்களை உள்ளடக்கி நடைபெற்றது. சங்கராபுரம் நூலக வாசக வட்டத் தலைவர் குறிஞ்சி அரங்க.செம்பியன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT