விழுப்புரம்

வழக்குரைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு

DIN

திண்டிவனத்தை அடுத்த தென்பசியார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கு இலவசமாக சட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
பார் அசோசியேஷன் செயலர் வழக்குரைஞர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில் வழக்குரைஞர் வெங்கடேசன் வரவேற்றார். வழக்குரைஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ், திண்டிவனம் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் தேசிங்கு, மூத்த வழக்குரைஞர்கள் விஜயன், ராஜகணபதி, செந்தாமரைகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், இளம் வழக்குரைஞர்கள் சிவில் நீதிபதி தேர்வுக்குத் தயாராகும் வகையில், 'சட்டம் என்ன சொல்கிறது' என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பை மதுரை மாவட்ட நீதிபதி பூபாலன் நடத்தினார். இந்தப் பயிற்சி வகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT