முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் இயற்கை காய்கறி கண்காட்சி

விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் இயற்கை காய்கறி, விதைக் கண்காட்சி, கருத்தரங்கம் நடைபெற்றது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 9:22 AM
பகிர்:

விழுப்புரத்தில் பசுமை இயற்கை விவசாய இயக்கம் சார்பில் இயற்கை காய்கறி, விதைக் கண்காட்சி, கருத்தரங்கம் நடைபெற்றது.
விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சியில் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிர் செய்தல் குறித்தும், வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைத்தல் குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது. 
கண்காட்சியில் கீரை, அவரை, வெண்டை, தக்காளி, கத்தரி போன்ற செடிகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 
குறுகிய காலத்தில் வளரும் அச்செடிகளுக்கு எந்த வகையிலான உரங்களை பயன்படுத்தலாம், தண்ணீர் தேவை எவ்வளவு? எவ்வளவு நாள்களில் அறுவடை செய்யலாம் என்பது குறித்தும் விளக்கினர். மேலும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட தானியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 
மேலும், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட வெங்காயம், கத்தரி, கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டன. பார்வையாளர்களுக்கு தரமான விதைகளும் விற்பனை செய்யப்பட்டன. 
வேளாண் உபகரணங்கள், சொட்டுநீர் பாசனம், வெயிலை கட்டுப்படுத்தும் திரைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.