முகப்பு
விழுப்புரம்

பெருந்திட்ட வளாகத்தில் மதில் சுவர் உடைப்பு

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில்,  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே மதில் சுவரை மர்ம நபர்கள் உடைத்து வழி ஏற்படுத்தியுள்ளனர்.

விழுப்புரம்

பெருந்திட்ட வளாகத்தில் மதில் சுவர் உடைப்பு

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில்,  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே மதில் சுவரை மர்ம நபர்கள் உடைத்து வழி ஏற்படுத்தியுள்ளனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில்,  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே மதில் சுவரை மர்ம நபர்கள் உடைத்து வழி ஏற்படுத்தியுள்ளனர். இதனை அடைக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட ஆட்சியரம்,  காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், முதன்மைக் காவல் அலுவலகம்,  மாவட்டக் கருவூலம்,  பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள், அரசு உயர் அதிகாரிகள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நெல்லை ஆட்சியரகத்தில் கூலித் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரம் உள்ளிட்ட அரசு அலுவலகம் அமைந்துள்ள பெருந்திட்ட வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 
பிரதான சாலைகள் தவற மற்ற இடங்களில் இருந்த பாதைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
 இதையடுத்து, புதிய பேருந்து நிலையம் பின்புறம் இருந்த பாதை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இருந்த பாதை, அலுவலர்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்த பாதை ஆகியவை அடைக்கப்பட்டன.
ஆனால், தற்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள மதில் சுவரை உடைத்து, மர்ம நபர்கள் பாதை ஏற்படுத்தியுள்னர். பாதுகாப்பு காரணங்களுக்கு, அந்தப் பகுதியில் இருந்த பாதை சுவர் எழுப்பி அடைக்கப்பட்டது. 
தற்போது, அதற்கு அருகிலேயே, சுவரை இடித்து, மணல் மூட்டைகளை அடுக்கி, எளிதாக கடந்து செல்ல வசதியாக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, போலீஸார் இதில் கவனம் செலுத்தி,  மதில் சுவரை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மதில் சுவரை எழுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →