முகப்பு
விழுப்புரம்

23 போலீஸார் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 23 போலீஸார் திங்கள்கிழமை அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 23 போலீஸார் திங்கள்கிழமை அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம், கஞ்சனூர் உதவி காவல் ஆய்வாளர்(ஆயுதப்படை) பார்த்தீபன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கும், கோட்டக்குப்பம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்(ஆயுதப்படை) முருகன் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கும், உளுந்தூர்பேட்டை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் எடைக்கல் காவல் நிலையத்துக்கும், வெள்ளிமேடுபேட்டை காவல்நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பாண்டியன் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கும், கெடார் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சுந்தரராஜூ விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இதேபோல, தலா 6 தலைமைக் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், காவலர்கள் என 23 போலீஸார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →