சிறுகடம்பூர் முனீஸ்வரன் கோயிலில் மார்ச் 4-இல் மகா கும்பாபிஷேகம்
செஞ்சி சிறுகடம்பூர் சங்கரன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் ஜீர்ணோர்த்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற மார்ச் 4-ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது.
செஞ்சி சிறுகடம்பூர் சங்கரன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரன் கோயில் ஜீர்ணோர்த்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற மார்ச் 4-ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், மாலையில் எஜமானசங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, விசேஷ மூலமந்திர பூஜை, இரவு 9 மணிக்கு மகாதீபாராதனை, இரவு 10 மணிக்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை ஆகியவை நடைபெறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் ஸ்ரீமுனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.