தப்பியோடிய கைதி பிடிபட்டார்
கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது தப்பி ஓடிய விசாரணைக் கைதி புதன்கிழமை பிடிபட்டார்.
கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது தப்பி ஓடிய விசாரணைக் கைதி புதன்கிழமை பிடிபட்டார்.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் மா.ராஜா, போலீஸாருடன் புதன்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, பேருந்து நிலைய எம்.ஜி.ஆர், அண்ணா சிலையின் பின்புறம் உள்ள கோயிலில் உட்கார்ந்திருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் சங்கராபுரம் மோதல் வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பி ஓடிய விசாரணைக் கைதியான சங்கராபுரம் அருகே க.செல்லம்பட்டைச் சேர்ந்த கல்வி அவதாரம் மகன் செல்வராஜ் (33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து கள்ளக்குறிச்சி கிளைச் சிறையில் அடைத்தனர்.