நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் ரயில் நிலைய வளாக வாயில் கதவுகளை மூடியதோடு, வாகனங்களுக்கு விதிகளை மீறி கட்டாய கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை
விழுப்புரம் ரயில் நிலைய வளாக வாயில் கதவுகளை மூடியதோடு, வாகனங்களுக்கு விதிகளை மீறி கட்டாய கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் ரயில் நிலைய வாயில் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் அ.நூர்முகமது தலைமை வகித்தார்.
நகர நல கூட்டு நடவடிக்கைக் குழு கோ.பாலசுப்பிரமணியன், நுகர்வோர் பாதுகாப்பு மையம் எ.விவேகானந்தன், எம்.கே.
முகமது பிலால், அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் கே.கலியவரதன், ஓய்வூதியர் சங்கம் எஸ்.வின்சென்ட் டி பால், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பொ.சிவலிங்கம், தமிழ் இளைஞர் கூட்டமைப்பு எழில். இளங்கோ, மன வளக்கலை மன்றம் கருணாநிதி, நேரு யுவகேந்திரா தேவராஜ், யாதும் ஊரே யாவரும் கேளீர் பொது நலச் சங்கம் நாராயணன், பாரதி சிந்தனைப்புலம் இரா.ராமமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் பேசினர்.
விழுப்புரம் ரயில் நிலைய வளாகப் பகுதிக்கு வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு விதிமீறி கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். ரயில் நிலையத்துக்கு இரு புறங்களிலும் குருசாமிப்பிள்ளைத் தெருவில் அமைக்கப்பட்ட இரண்டு வாயில்களை மூடியுள்ளதை திறந்துவிட வேண்டும்.
ரயில் நிலையத்தில் தனியாக இயங்கும் வாகன நிறுத்துமிடத்தில் 24 மணி நேர கட்டணம் என்பதை 12 மணி நேர கட்டணமாக குறைத்துள்ளதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.