முகப்பு
விழுப்புரம்

நூலகத்தில் கராத்தே பயிற்சி

கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 15 மே, 2018 at 4:28 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
நூலக வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியன் பயிற்சியை தொடக்கி வைத்தார். ஸ்போர்ட்ஸ் ஷோட்டோகான் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் என்.கே.முருகன் கராத்தே பயிற்சி அளித்தார்.
இதில் நகர்ப்புற மாணவ, மாணவிகள் அதிகளவில் கலந்துகொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை நூலகர்கள் மு.அன்பழகன், மு.சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.