வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை திருட்டு
மரக்காணம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
மரக்காணம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள செட்டிக்குப்பம், ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த பச்சையப்பன் மனைவி ரேவதி (35). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனது குடும்பத்தினருடன் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்த ரேவதி, கழுத்தில் அணிந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 9 பவுன் தங்கச் சங்கிலி மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நகை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.