பிளஸ் 2 தேர்ச்சி: சக்தி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
பிளஸ்-2 தேர்வில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
பிளஸ்-2 தேர்வில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய இந்தப் பள்ளி மாணவர்கள் 317 பேரில் 315 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 3 பேர் 1,173, 1,154, 1,153 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.
கணித பாடத்தில் 3 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் ஒருவரும், கணக்குப் பதிவியலில் ஒருவரும் 200-200 மதிப்பெண்கள் பெற்றனர். சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளார் இ.சி.ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், பள்ளி முதல்வர் எஸ்.சிவசங்கரன் ஆகியோர் பாராட்டினர்.