விழுப்புரம்

மாஷபுரீஸ்வரர் கோயிலில் இன்று தேரோட்டம்

DIN

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட உளுந்தாண்டார்கோயில் மாஷபுரீஸ்வரர் கோயிலில் லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர்(சிவன்) தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை (மே 27) நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாள் இரவிலும் பஞ்சமூர்த்திகள் சுவாமிகளுக்கு தீபாராதனை செய்தனர்.
பின்னர், புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கை முழங்க வீதியுலா நடைபெற்றது.
25-ஆம் தேதி மாலை சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான மாஷபுரீஸ்வரர் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
தேரை உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ இரா.குமரகுரு வட பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கிவைக்கிறார்.
28-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் ஞானதீர்த்தக் குளக்கரையில் சுவாமிக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT