விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜனகவல்லி நாயகி சமேத ஸ்ரீ வைகுண்ட வாச பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் உற்சவர் எழுந்தருளியதும் காலை 5.50 மணிக்கு திருத்தேர் உற்சவம் தொடங்கியது.
காமராஜர் தெருவில் இருந்து புறப்பட்ட தேர் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று நிலையை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, மாலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. புதன்கிழமை சந்திரப் பிரபையும், வியாழக்கிழமை பெருமாளுக்கு புஷ்ப யாகமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மணி, ஆய்வாளர் சரவணன், ஆலய அர்ச்சகர் வாசு, பட்டாச்சாரியார் மற்றும் திருமஞ்சன கைங்கர்யதாரர்கள், ஆலயப்பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.