முகப்பு
விழுப்புரம்

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உள்பட்ட குடியநல்லூர் கிராமத்தில் தீவிர கோமாரி நோய் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:51 AM
பகிர்:

தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உள்பட்ட குடியநல்லூர் கிராமத்தில் தீவிர கோமாரி நோய் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
 கள்ளக்குறிச்சியை அடுத்த குடியநல்லூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமுக்கு தொரடிப்பட்டு கால்நடை மருத்துவர் செல்வம் தலைமை வகித்தார். அப்பகுதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள 350 கால்நடைகளுக்கு மருத்துவர் செல்வம் தடுப்பூசி போட்டார். முகாமில் கால்நடை ஆய்வாளர் சிங்காரவேல், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெயராமன், கிராம தொடர்பு நிலை பணியாளர்கள் தவசி, சக்திவேல் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.