முகப்பு
விழுப்புரம்

மூத்த குடிமக்கள் சங்கக் கூட்டம்

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:41 AM
பகிர்:

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குக சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சுருளி மணி வரவேற்றார். பொருளாளர் வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்தார். வட்ட நிர்வாகிகள் தண்டபாணி, பெரியண்ணன், ராஜாராம், கண்ணன், சாரங்கபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோன்று, கேரள மாநிலத்தில் மழை வெள்ளதால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உடைமைகளை இழந்தவர்களுக்கு சங்கம் சார்பில் மாவட்டத்தில் உள்ள 10 கிளைகள் மூலம் நிவாரணப்பொருள்களை சேகரித்து அனுப்பி வைப்பது, புதிய காப்பீட்டுத் திட்டத்துக்கு பழைய காப்பீட்டு அட்டையையே வரும் 2022-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தலாம் என்ற தகவலை ஓய்வூதியர்களுக்கு தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.