விழுப்புரம்

இரு சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி

DIN

திண்டிவனம் பகுதியில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
 திண்டிவனம் அருகே பாதிரி கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் ராஜா(19). மயிலம் அருகேயுள்ள கொல்லியங்குணம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். இவர் திங்கள்கிழமை மாலை கல்லூரி முடிந்து தனது  இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தார். 
கூட்டேரிப்பட்டை அடுத்த தென் பசியார் என்ற இடத்தில் சென்றபோது, இவரது இரு சக்கர வாகனம் மீது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த ராஜா நிகழ்விடத்திலேய உயிரிழந்தார். சடலத்தை மயிலம் போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மயிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, திண்டிவனம் நகரில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் திண்டிவனத்தில் நகைக் கடை நடத்தி வரும் முகேஷ் குமார்(38) என்பவர் உயிரிழந்தார்.  இது குறித்து திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT