விழுப்புரம்

கோயில் நிர்வாகி வீட்டில் ரூ.1.50 லட்சம் திருட்டு

DIN

திண்டிவனம் அருகே நள்ளிரவில் கோயில் நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.
திண்டிவனம் அருகே உள்ள விளங்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் அரிதாஸ்(41).  இவர், அங்குள்ள அங்காளம்மன் கோயில் நிர்வாகியாக உள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு, அரிதாஸ், அவரது மனைவி,  தாய் உள்ளிட்டோர் வீட்டின் வராண்டாவிலும் அவரது மகள் சகானா (14) வீட்டின் உள்ளேயும் படுத்துத் தூங்கினர்.  நள்ளிரவு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அறையின் சுவரில் மாட்டி வைத்திருந்த சட்டைப் பையில் இருந்து ரூ.30 ஆயிரம் பணத்தை திருடியுள்ளனர்.  மேலும்,  வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ. 1. 20 லட்சத்தையும் கண்டறிந்து திருடிச் சென்றனர்.  
இது குறித்த புகாரின் பேரில்,  ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான மயிலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT