விழுப்புரம்

ஊரக வேலை வழங்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினர் தர்னா

DIN

தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை உரையாற்றினார்.
போராட்டத்தின்போது, காணை ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசாணை 52-ன்படி, 4 மணி நேர வேலை, சட்டத்தின்படி தினசரி கூலி ரூ.229 வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ள நிலையில், பல ஊராட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கி உள்ளனர்.
இதில், அகரம் சித்தாமூர், வாழபட்டு ஆகிய ஊராட்சிகளில் இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கவில்லை. இவர்களுக்கு வேலை வழங்க பதிவு செய்வதற்கு இணைய வழி பதிவில் பழுது உள்ளதாகக் கூறி, ஏமாற்றி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அரசாணை 52-ன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தினர்.
அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவன், தர்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாற்றுத் திறனாளிக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததால், மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT