விழுப்புரம்

செஞ்சி விழுப்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பட்டுபோன மரம் அகற்படுமா!

DIN

செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் நெடுஞ்சாலையில் பாலப்பட்டு என்ற இடத்தில் உள்ள பட்டுப்போ ஆலமரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது எனவே இந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதே போன்று அருகில் உள்ள பச்சை மரத்தின் பெரும் கிளை ஒன்று சாலையில் முறிந்து விழும் நிலையில் உள்ளது எனவே இரண்டு மரக்கிளைகளையும் அகற்ற வேண்டும் என இவ்வூா் கிராம மக்கள் நெடுஞ்சாலை துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

செஞ்சி விழுப்புரம் செல்லும் சாலை தற்போது ஆற்காடு வரை இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து ஆரணி, ஆற்காடு, வேலூா் செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன.

இந்நிலையில் பாலப்பட்டு அருகே உள்ள கல்மண்டம் எதிரே பெரிய ஆலமரம் பட்டுபோய் உள்ளது. இதன் கிளைகள் அனைத்தும் சாலையில் உள்ளது. எனவே கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்தை தவிா்த்திட வேண்டி தமிழ்நாடு அரசு செஞ்சி உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினா் தக்க நடவடிக்கை மேற்கொண்டு மரத்தினை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT