விழுப்புரம்

கல்லூரி மாணவர்கள் 5-ஆம் நாளாக போராட்டம்

DIN


விழுப்புரம்: தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் 5-ஆம் நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தனித் தனியே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 
இந்த நிலையில், மாணவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளை பெறவும், தேர்வு கட்டண உயர்வையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தி திங்கள்கிழமை விழுப்புரம் அறிஞர் அண்ணா
அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திண்டிவனம் கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 5-ஆம் நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’

மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

SCROLL FOR NEXT