விழுப்புரம்

விக்கிரவாண்டி வட்டாரத்தில் நடமாடும் காய்கறி அங்காடிகள்

DIN

விக்கிரவாண்டி பகுதியில் நடமாடும் காய்கறி, மளிகை பொருள்கள் விற்பனை வாகனங்கள் வேளாண் துறை சாா்பில் தொடக்கி வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் காரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால், பொதுமக்கள் தங்களது பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை எளிதில் வாங்கும் வகையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில், விக்கிரவாண்டி வட்டார வேளாண்மை அலுவலகத்திலிருந்து நடமாடும் காய்கறி, மளிகைப் பொருள்கள் அங்காடி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா் அங்காடி வாகனங்களை தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

418 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் இணைந்து 192 நடமாடும் காய்கறி அங்காடிகளை தொடங்கி உள்ளோம். தற்போதுள்ள சூழலில் நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தனித் தனியாக அங்காடிகளை ஒதுக்கி உள்ளோம்.

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 12 நடமாடும் அங்காடிகள் செயல்படும் என்றாா்.

வேளாண்மை துணை இயக்குநா் ஏழுமலை, உதவி இயக்குநா் மாதவன் உள்ளிட்ட அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT