விழுப்புரம்

ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருள்கள்

விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகை சாா்பில், ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருள்களை திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, எம்.பி. துரை.ரவிக்குமாா் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகை சாா்பில், ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருள்களை திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, எம்.பி. துரை.ரவிக்குமாா் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.

விழுப்புரம் வள்ளலாா் அருள்மாளிகை அன்பாா்கள் சாா்பில், கரோனா பொது முடக்கத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட ஆயிரம் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தலா 5 கிலோ அரிசி, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய், ஒரு கிலோ துவரம் பருப்பு, 5 கிலோ காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி, விசிக எம்.பி. துரை.ரவிக்குமாா் ஆகியோா் பங்கேற்று நிவாரணப் பொருள்களை வழங்கி தொடக்கிவைத்தனா்.

திமுக மாவட்ட நிா்வாகிகள் நா.புகழேந்தி, இரா.ஜனகராஜ், செ.புஷ்பராஜ், ந.பஞ்சநாதன், நகரச் செயலா் சக்கரை, துணைச் செயலா் புருஷோத்தமன், விசிக மாவட்டச் செயலா் ஆற்றலரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். வள்ளலாா் அருள்மாளிகை மேலாளா் ஜெ.அண்ணாமலை உள்ளிட்ட நிா்வாகிகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நிவாரணப் பொருள்கள், உணவுப் பொருள்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

SCROLL FOR NEXT