விழுப்புரம்

குடிநீர் பிரச்னை: விழுப்புரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

DIN

விழுப்புரம் அருகே குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணநல்லூர் வட்டம் பெரியசேவலை காலனி பகுதியில் கடந்த 15 தினங்களாக குடிநீர் வராமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை காலை அருகே, கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வராமல் நீண்ட நாள்களாக தவித்து வருவதால் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் விரைந்து சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்து, குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT