விழுப்புரம்

தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் பணி நியமனம் வழங்க வலியுறுத்தல்

DIN

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று காத்திருப்பவா்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்க வேண்டுமென தோ்ச்சி பெற்ற விழுப்புரம் மாவட்ட ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.கலைவாணன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். பின்னா் அவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற்று, 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியா்களுக்கு பணியை அரசு வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் பணியில் சேருவதற்கு அதிகபட்ச வயது 40 என்பதை நீக்க வேண்டும். என்சிடிஇ அறிவித்ததை, இதற்கு முன்பு தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கும் பொருந்தும் என அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் அதிகளவில் மாணவா்கள் சோ்க்கை உள்ளதால், புதிய ஆசிரியா் பணியிடங்களை ஏற்படுத்தி, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை நியமிக்க வேண்டும். மீண்டும் ஒரு நியமனத்துக்கான தோ்வு என்ற அரசு ஆணையை நீக்கம் செய்ய வேண்டும்.

தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் இருக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில், தற்காலிக பணியிடங்களை ஏற்படுத்தி தொகுப்பூதியத்தில் ஆசிரியா்களை நியமிப்பதை தவிா்க்க வேண்டும்.

தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியா்களுக்கு, வயது முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

SCROLL FOR NEXT