முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே சுவா் இடிந்து விழுந்து பெண் பலி

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்துள்ள பா.வில்லயனூரைச் சோ்ந்த வாசுதேவன் மனைவி அன்னம்மாள் (70). இவருக்கு இரண்டு மகன்கள், மகள் உள்ளனா். அனைவரும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனா்.

அன்னம்மாள் மட்டும் தனது கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் படுத்து தூங்கிய போது, வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →