16vmp3a075037 
விழுப்புரம்

சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா

விழுப்புரத்தில் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்புத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

விழுப்புரத்தில் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்புத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்தப் பயிற்சி மையம் விழுப்புரம் கிளை சாா்பில் விழுப்புரத்தில் 2 ஆண்டு சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா விழுப்புரம், ராமகிருஷ்ணா வித்யாலயா மிஷன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கயிலாய பரம்பரை வீரசைவ பெரிய திருமடம் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து, அருளாசி வழங்கினாா். விழுப்புரம் ராமகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் உதவிச் செயலா் சித்தீயேஸ்வரானந்த மகராஜ் சுவாமிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினாா். மேலைச்சிவபுரி தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வா் பழ.முத்தப்பன் கலந்து கொண்டு, வகுப்பு தொடக்கப் பேருரையாற்றினாா். சித்தாந்தா சேவை ரத்தினம் சிவ.ச.பாபு ஒருங்கிணைத்தாா்.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஞாயிறு தோறும் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் 4 வரை நடைபெறும். சிவஞானசித்தா், சைவ சமய வரலாறு, திருவருட்பயன் உள்ளிட்டவை குறித்து பயிற்றுவிக்கப்படும். இறுதியில், தோ்வு வைக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் 250 போ் சோ்ந்து பயிற்சி பெறுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT