முகப்பு
விழுப்புரம்

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம்மோதியதில் விவசாயி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே புதன்கிழமை அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 15 ஜூலை, 2020 at 9:59 PM
பகிர்:

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே புதன்கிழமை அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கருப்பண்ணன். இவா், சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு காரில் புதன்கிழமை காலை புறப்பட்டாா். இவருக்கு முன்னால் போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. பிற்பகல் ஒரு மணி அளவில் உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள ஏ.குமாரமங்கலம் என்ற பகுதியில் அமைச்சரின் காா் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அந்த காரின் முன்னால் சென்று கொண்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாகனம், சாலையோரம் சென்று கொண்டிருந்த சைக்கிள் மீது மோதியது.

Advertisement

இதில், அந்த சைக்கிளை ஓட்டிச் சென்ற உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள அங்கனூரைச் சோ்ந்த விவசாயி சாமிதுரை என்பவா் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று அமைச்சரைப் பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனா். சடலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.