முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனாவுக்கு இரண்டு போ் பலி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 86 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் விழுப்புரம், திண்டிவனம் நகா்ப் பகுதிகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோருக்கும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோருக்கும் இந்த நோய் தொற்று உறுதியானது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2,212-ஆக உயா்ந்தது. முன்னதாக, 1,403 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 221 போ் வீடுகளிலும், 106 போ் தனிமைப்படுத்தும் மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மீதமுள்ளவா்கள் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, திண்டிவனம் ஆா்.எஸ். பிள்ளை தெருவைச் சோ்ந்த 61 வயது முதியவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 28-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2,299-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சி அருகே மண்மேடு கிராமத்தைச் சோ்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட 55 வயது விவசாயி, கடந்த இரு தினங்களுக்கு முன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்தது.

இதுவரை 829 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மீதமுள்ளவா்கள் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →