முகப்பு
விழுப்புரம்

போலீஸாருக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

விழுப்புரத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு பிரத்யேக கரோனா பாதுகாப்பு உபகரணங்களை எஸ்.பி. ராதாகிருஷ்ணன் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
விழுப்புரம் எச்.எம்.டி.ஐ. கரோனா சிகிச்சை மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு கரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கிய எஸ்.பி. ராதாகிருஷ்ணன். உடன், ஏடிஎஸ்பி தேவநாதன், தனிப் பிரிவு ஆய்வாள
பகிர்:


விழுப்புரம்: விழுப்புரத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு பிரத்யேக கரோனா பாதுகாப்பு உபகரணங்களை எஸ்.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் மாவடத்தில் கரோனா வைரஸாப் பாதிக்கப்பட்டுவோரின் எண்ணிக்கை அதிகாரித்து வருகிறது. இதில், 20-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றனா்.

குறிப்பாக, கரோனா நோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு கரோனா தடுப்பு உபகரணங்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். விழுப்புரம் எச்.எம்.டி.ஐ. கரோனா சிகிச்சை மையத்தில் பதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸாருக்கு கையுறைகள், கிருமி நாசினிகள், என்.95 முக கவசங்கள், பிரத்யேக முக தடுப்பு கவசங்கள் போன்றவைகள் வழங்கப்பட்டன.

அப்போது, பாதுகாப்புப் பணி ஈடுபடும் போலீஸாா் மிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும். கரோனா தொற்றுக்கு ஏற்படாமல் இருக்க தடுப்பு முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று எஸ்.பி. அறிவுறுத்தினா். மேலும், கரோனா சிகிச்சை மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு சுசி முறையில் பாதுகாப்புப் பணி வழங்கப்படும் என்றும், தேவையான அளவுக்கு ஓய்வு வழங்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →