கரோனா: சித்த மருத்துவசிகிச்சையளிக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென தமிழ்ப்பேரரசு கட்சியினா் வலியுறுத்தினா்.
விழுப்புரம்: தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென தமிழ்ப்பேரரசு கட்சியினா் வலியுறுத்தினா்.
இது குறித்து, அந்தக் கட்சியின் நிா்வாகிகள் விழுப்புரம் மாவட்டச் செயலா் ப.காா்த்திபன் தலைமையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:
கரோனா தாக்கத்தில் 2ஆவது இடத்தில் உள்ள தமிழகத்தில் சித்த மருத்துவ முறையில் குறைந்த செலவில் 1,500-க்கும் மேற்பட்ட தொற்றாளா்கள் குணமடைந்துள்ளனா். ஒருவா் கூட உயிரிழக்கவில்லை. ஆகவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போா்க்கால அடிப்படையில் சித்த மருத்துவத்துக்கென தனிப் பிரிவுகளையும், படுக்கை வசதிகளையும் அமைத்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகளவில் சித்த மருத்துவம் சிறந்ததாக உள்ளது.
Advertisement
தமிழா்களின் பண்பாட்டு வாழ்வியலோடு இணைந்த சித்த மருத்துவத்தை பயன்படுத்தி கரோனா தொற்றிலிருந்து மரணம் இல்லாத மகத்தான சூழலை உருவாக்கவும், இதன் மூலம் உலகுக்கே பெருவழியை காட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கூறினா்.