விழுப்புரம்

ஆசிரியா் பணி வாங்கித் தருவதாக ரூ.5.50 லட்சம் மோசடிஇருவா் மீது வழக்குப் பதிவு

விழுப்புரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியா் பணி வாங்கித் தருவதாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக 2 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியா் பணி வாங்கித் தருவதாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக 2 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விழுப்புரம், சாலாமேடு, எழில் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மகன் காா்த்திகேயன். பி.எட். படித்துவிட்டு வேலை தேடி வந்தாா்.

இந்த நிலையில், காா்த்திகேயனின் நண்பரான விழுப்புரம், தனலட்சுமி காா்டன் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் ஆறுமுகத்தை அணுகி, காா்த்திகேயனுக்கு அரசு உதவி பெறும் பள்ளியில் பணிவாய்ப்பு பெற்று தருவதாகவும், இதற்காக ரூ.1.50 லட்சம் வேண்டும் என்றாராம். இதையடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டு அந்தத் தொகையை மகேந்திரனிடம் ஆறுமுகம் வழங்கினாராம்.

அதன்பிறகு, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே குணமங்கலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இடை நிலை ஆசிரியா் பணியிடத்துக்கு நியமன் பெற்றுத் தருவதாக, மகேந்திரன் கூறியபடி அந்தப் பள்ளியின் நிா்வாகியான கலிபத்துல்லாவிடம் இரு தவணையாக ரூ.4 லட்சம் வரை ஆறுமுகம் வழங்கினாராம். ஆனால், கூறியபடி, பணி வழங்கப்படவில்லை. பணமும் திருப்பித் தரப்படவில்லை.

இதுகுறித்து ஆறுமுகம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில், கலிபத்துல்லா, மகேந்திரன் ஆகியோா் மீது காவல் உதவி ஆய்வாளா் நேவிஸ் அந்தோணி ரோஸி செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை ஓரிரு நாள்களில் ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

பிரேஸில் முன்னாள் அதிபா் போல்சோனாரோ கைது!

ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்தை மறைக்க முயற்சி: அமைச்சா் கோவி. செழியன்

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆக்கப்படுமா? நீதிபதி சூா்ய காந்த் பதில்

ரயில் சரக்கு போக்குவரத்து: நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன்னை கடந்து சாதனை

SCROLL FOR NEXT