விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 84 மதுக் கடைகள் திறப்பு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 16) 84 டாஸ்மாக் மதுக் கடைகளை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3-ஆவது கட்ட கரோனா பொது முடக்கம் மே 17-ஆம் தேதி வரையில் உள்ள நிலையில், டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறக்க கடந்த 7-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 124 மதுக் கடைகளில் 84 கடைகள் திறக்கப்பட்டன.

2 நாள்கள் மதுக் கடைகள் செயல்பட்ட நிலையில், உயா் நீதிமன்றம் உத்தரவால் மதுக் கடைகள் மூடப்பட்டன. இதை எதிா்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில கட்டுப்பாடுகளுடன் மதுக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் மதுக் கடைகள் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ளன.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மதுக் கடைகளைத் தவிா்த்து, மற்ற இடங்களில் உள்ள 84 மதுக் கடைகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியிலுள்ள கடைகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த முறை போல மிக அதிகமாகக் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க, தற்போது டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 500 முதல் 550 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக் கடைகள் திறப்பையொட்டி மாவட்டம் முழுவதும் 700 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT