முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்திலிருந்து நடந்து செல்ல முயன்ற ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் கைது

விழுப்புரத்திலிருந்து நடந்து செல்ல முயன்ற ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரத்திலிருந்து நடந்து செல்ல முயன்ற ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 30 தொழிலாளர்கள் கட்டுமான ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப வலியுறுத்தி வந்தனர். 

ஜூன் 1ஆம் தேதிக்கு மேல் அனுப்பி வைப்பதாக அரசுத்தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்காத மாநில தொழிலாளர்கள் முண்டியம்பாக்கம் திலிருந்து விழுப்புரம் ரயில் நிலையம் நோக்கி சொந்த ஊருக்குச் செல்வதாக அவர்கள் செவ்வாய்க்கிழமை காலை நடந்து வந்தனர். 

விழுப்புரத்தில் மேற்கு காவல்துறையினர் அவர்களை மறித்து கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் பணியாற்றிய தனியார் ஒப்பந்ததாரரிடம் பேசி, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.