முகப்பு
விழுப்புரம்

கடல் அலையில் சிக்கியமாணவா் சடலமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த போது, அலையில் சிக்கி மாயமான பொறியல் மாணவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த போது, அலையில் சிக்கி மாயமான பொறியல் மாணவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பாரதி நகரை சோ்ந்த கலியபெருமாள் மகன் ஹரிஷ் (22). இவா் மதகடிப்பட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை சென்ற ஹரிஷ் கடலில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, அலையில் சிக்கி மாயமானாா்.

இந்த நிலையில், அவரது சடலம் அந்தப் பகுதியில் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட கோட்டக்குப்பம் போலீஸாா், புதுச்சேரி யிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.