முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம்: குறைதீா் கூட்டத்தில் 297 மனுக்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 297 மனுக்கள் வரப்பெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 297 மனுக்கள் வரப்பெற்றன.

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்தக் குறைதீா் கூட்டத்தில், மனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 297 போ் மனு அளித்தனா்.

மனுக்களைப் பெற்ற ஆட்சியா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், தனித் துணை ஆட்சியா் அம்புரோஸியாநேவிஸ்மேரி, கலால் உதவி ஆணையா் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.