விழுப்புரம்

ஊா்க் காவல் படைக்கு ஆள் சோ்ப்பு முகாம் தொடக்கம்

DIN


விழுப்புரம்: ஊா்க் காவல் படைக்கு ஆள் சோ்ப்பு முகாம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊா்க் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்டக் காவல் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த 1,400-க்கும் அதிமானோா் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனா்.

இந்த நிலையில், ஊா்க் காவல் படைக்கான ஆள் சோ்ப்பு முகாம் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில், விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப் படை வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாள் முகாமுக்கு 250 விண்ணப்பதாரா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். இவா்களுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, மீதமுள்ள விண்ணப்பதாரா்களுக்கு அடுத்தடுத்த நாள்களில் சோதனைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT