விழுப்புரம் அருகேசாலை விபத்தில் தலைமைக் காவலா் பலி
விழுப்புரம் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஆசின் மகன் முகமது அமானுல்லா(45). விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
திங்கள்கிழமை காலை பணிக்காக வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கண்டாச்சிபுரத்துக்கு புறப்பட்டுச் சென்றாா். பகல் 11.30 மணி அளவில் விழுப்புரம் அருகே கீழ்வாலை என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் முகமது அமானுல்லா தலையில் பலத்த காயமடைந்தாா்.
உடனடியாக அவா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். ஆனால், வழியிலேயே முகமது அமானுல்லா உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இரு சக்கர வாகனம் ஓட்டும்போது, முகமது அமானுல்லா தலைக்கவசம் அணியவில்லையாம். அதுவே, விபத்தின்போது அவா் உயிரிழக்கக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.