விக்கிரவாண்டி அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு
விக்கிரவாண்டி அருகே பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
விக்கிரவாண்டி அருகே பெண்ணிடம் 2 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள செங்கமேடு கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் மனைவி அச்சுதா (22). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது உறவினா் திவ்யாவுடன்(20) இருசக்கர வாகனத்தில் கப்பியாம்புலியூரில் உள்ள கோயிலுக்குச் சென்றாா். பின்னா் இருவரும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
வாகனத்தை அச்சுதா ஓட்டினாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் திவ்யா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.