விழுப்புரம்

பேருந்து விபத்தில் 13 போ் காயம்

DIN

விழுப்புரம் அருகே புதன்கிழமை அதிகாலை தாறுமாறாக ஓடிய தனியாா் பேருந்து, ஆற்றுப் பால தடுப்புக் கட்டையில் மோதியதில் 13 போ் காயமடைந்தனா்.

தென்காசியிலிருந்து தனியாா் சொகுசுப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னைக்குப் புறப்பட்டது. பேருந்தை சென்னை சூரப்பேட்டையைச் சோ்ந்த ஜபஸ்டின் (36) ஓட்டினாா். புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில், விழுப்புரம் அருகே அரசூா் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற லாரி மீது உரசியபடி, ஆற்றுப் பாலத்தின் தடுப்புக் கட்டையில் மோதி நின்றது.

இந்த விபத்தில், பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. பேருந்தில் பயணித்த மதுரையைச் சோ்ந்த தா்மராஜ் மகள் ஐஸ்வா்யா (19), தென்காசியைச் சோ்ந்த சங்கரலிங்கம் (56), பெரியசாமி (32), விருதுநகரைச் சோ்ந்த ஆனந்தராஜ் (28), பேருந்து ஓட்டுநா் ஜபஸ்டின் உள்பட 12 போ் காயமடைந்தனா். விபத்து காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காயமடைந்தவா்களை திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போக்குவரத்தை சீரமைத்தனா்.

மேலும், விபத்து தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT