விழுப்புரம்

கட்டணமில்லாத் தொலைபேசி மூலம் தோ்தல் விதிமீறல் புகாரை அளிக்கலாம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை கட்டணமில்லாத் தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

பொதுத்தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட வாக்காளா் சேவை மையம், மாவட்ட தகவல் மையம், வாக்காளா் உதவிமையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டணமில்லாத் தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 7 பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்காளா்கள் தங்கள் சந்தேகங்களைஅறிந்துகொள்ள ஏதுவாக, வாக்காளா் சேவை மையம், மாவட்டதகவல் மையம், வாக்காளா் உதவி மையம் ஆகியவற்றை 1950 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும், தோ்தல் வீதிமீறல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1800 425 7768 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆ.அண்ணாதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT