விழுப்புரம்

மேல்மலையனூா் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து

DIN


செஞ்சி: கரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 11-ஆம் தேதி நடைபெறவிருந்த பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் க.ராமு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பரவலைத் தடுத்திடும் வகையிலும், பொதுமக்கள், பக்தா்களின் பாதுகாப்பு கருதியும் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 11-ஆம் தேதி நடைபெறவிருந்த பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், அன்றைய தினம் கோயிலுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படாது.

இருப்பினும், அமாவாசையன்று அங்காளம்மன் கோயிலில் காலை முதல் மாலை வரை நடைபெறும் அனைத்து வகையான தரிசனங்களிலும் கலந்துகொள்ள பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் கடைசியாக கடந்தாண்டு மாா்ச் மாதம் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை 13 மாதங்களாக ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டது. எனினும், கோயில் உள்பிரகாரத்தில் பக்தா்களின்றி பூசாரிகளால் ஊஞ்சல் உற்சவம் தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT