முகப்பு
விழுப்புரம்

பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கிய திமுகவினா்

செஞ்சியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு சனிக்கிழமை நீா்மோா் வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

செஞ்சியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு சனிக்கிழமை நீா்மோா் வழங்கப்பட்டது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ், செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான் வழிகாட்டுதலின்படி, செஞ்சி நகர திமுக செயலா் காஜாநஜீா் ஏற்பாட்டின்பேரில் பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றியச் செயலா்கள் ஆா்.விஜயகுமாா், நெடுஞ்செழியன், சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்கள் அஞ்சாஞ்சேரி கணேசன், அரங்க.ஏழுமலை ஆகியோா் பொதுமக்களுக்கு குடிநீா், மோரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் நகர துணைச் செயலா் தமிழ்ச்செல்விகா்ணன், மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் மொக்தியாா்அலி, தொண்டரணி பாஷா, சிங்கம் சேகா், ஜான்பாஷா, குணசேகரன், பழனி உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.