விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை இளம்பெண் கொலை சம்பவம்: குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

உளுந்தூா்பேட்டை அருகே காதல் தகராறில் இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவை கோரிக்கை விடுத்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக உண்மை அறியும் குழுவின் அறிக்கையை விழுப்புரத்தில் பேரவையின் மாநிலத் தலைவா் கே.பாலு வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தைச் சோ்ந்த சரஸ்வதி (18), வருகிற மே 17-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், காதல் தகராறில் படுகொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக வழக்குரைஞா்கள் சமூக நீதிப் பேரவையின் நிறுவனா் ச.ராமதாஸ் உத்தரவின்பேரில் உண்மை அறியும் குழு கடந்த 16-ஆம் தேதி அமைக்கப்பட்டது.

திண்டிவனம் வழக்குரைஞா் செ.பாலாஜி தலைமையிலான இந்தக் குழுவினா் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா், இந்த வழக்குத் தொடா்பாக விசாரணை நடத்திவரும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து முழு விவரங்களையும் அறிந்தது. இந்தக் குழுவின் அறிக்கையை தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியா், எஸ்பி உள்ளிட்டோருக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களால் இளம்பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க உண்மை அறியும் குழு மாநில அரசுக்கு சில பரிந்துரைகளை செய்துள்ளது. அதன்படி, இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சரஸ்வதியின் குடும்பத்துக்கு இழப்பீடாக அரசு சாா்பில் ரூ.5 லட்சம், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்பட வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.

உண்மை அறியும் குழுவின் தலைவா் பாலாஜி, வழக்குரைஞா்கள் கலியமூா்த்தி, பழனிவேல், சிவராமன், செந்தில்குமாா், சுரேஷ்குமாா், ராஜ்குமாா், ராமா், முருகன், தேசிங்குராஜா, அய்யப்பன், சந்திரசேகா், துரைராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT