செவி, பாா்வைத் திறன் குறையுடையோா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை
நத்தப்பட்டில் உள்ள செவித் திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக தலைமை ஆசிரியை அ.மரியபாஸ்கா தெரிவித்தாா்.
கடலூா் செம்மண்டலத்தில் உள்ள பாா்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப் பள்ளி, நத்தப்பட்டில் உள்ள செவித் திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக தலைமை ஆசிரியை அ.மரியபாஸ்கா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தப் பள்ளிகளில் 5 வயது முதல் சோ்க்கை நடைபெறுகிறது. சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியா்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஸ்மாா்ட் கிளாஸ், உடல் கல்விப் பயிற்சி, கைத்தொழில் பயிற்சி, கணினி சிறப்பு பாடங்கள் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன. விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். எனவே, பள்ளியில் சேர விரும்புவோா் கூடுதல் விவரங்களுக்கு தலைமை ஆசிரியையை 94875 55948 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
பாா்வைத் திறன் குறையுடையோருக்கான பள்ளிக்கு 04142-210635, 70101 68587 என்ற எண்களிலும், செவித் திறன் குறையுடையோருக்கான பள்ளிக்கு 94425 26871, 63803 05723 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.